எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு வறிய குடும்பம் வர போகும் தனது மகனின் முதலாம் ஆண்டு கல்லூரி தொகை செலுத்த தடுமாறி கொண்டிருந்தது. அவர்கள் கேட்கும் முன்பே நான் எனது நண்பர்கள் இருவர் உதவியுடன் பத்தாயிரம் ரூபாய் ஒரு கவரில் வைத்து கொடுத்து விட்டேன். அப்புறம் அதை வைத்து அவர்கள் 9500 Rs பீஸ் கட்டி விட்டனர். மேலும் இருவர் அவர்களிடம் உதவி செய்வதாக சொல்லியிருந்தார்கள் போல. அந்த வறிய குடும்பத்தின் குடும்ப தலைவர் என்னிடம் இப்படி கேட்டார்: "அவர்கள் நேரிடையாக கல்லூரிக்கே கட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து நான் ஏற்கனவே பீஸ் கட்டி விட்டேன்.. இப்போது அவர்களும் கட்டினால் நான் காலேஜ் போயி எக்ஸ்ட்ரா கட்டிய பணத்தை ரொக்கமாக வாங்கி கொள்ளலாமா?" அடேங்கப்பா..