அவர் எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது . அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை. நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘ டீ வேண்டும் ’ என்றோ அல்லது ‘ பணம் வேண்டும் ’ என்றோ எப்போதேனும் ஒருவர் கேட்பார் . ஆனால் இவர் கேட்பது ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். ‘ டீ வேண்டும் ’ என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல என்று நினைத்திருக்கலாம் . பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் ...
1990ஸ் ல ஸ்கூல் படிக்கும் போது, ஒவ்வொரு வருட கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது, ஒரே ஸ்கூல்ல படிக்கிற நண்பர்கள் பதினைஞ்சு, இருபது பேரு சேர்ந்து காசு கலெக்ட் பண்ணி டீ பார்ட்டி வைக்கிறது வழக்கம். பொதுவா கடைசி பரிட்சை சமூகவியல் நடக்கிற அன்னிக்கு சாயங்காலம் நடக்கும்.. சில சமயம் அதுக்கு மறுநாள் கூட வைப்போம். அதுல மொத முடிவு பண்ற விஷயம்.. யார் வீட்ல வைக்கிறதுன்னு.. எங்க குரூப்ல ரமேஷ் ன்னு ஒருத்தன் வீட்ல நல்ல பெரிய மொட்டை மாடி இருக்கும்.. அவங்க அப்பா அம்மா கொஞ்சம் ஜோவியல் டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாது.. அதனால அவங்க வீட்ல எங்க குரூப் வைக்கும்.. நாங்க எல்லோரும் அதே ஊர்ல இருக்கிற நாடார் ஸ்கூல் ல ஒம்போதாப்பு படிச்சுக்கிட்டு இருந்தோம். அம்பது ல இருந்து நூறு ரூபா வரைக்கும் ஒவ்வொருத்தர்ட்டயும் கலெக்ட் பண்ணுவோம். பேரு தான் டீ பார்ட்டி ஆனா வெறும் டீ மட்டும் இல்ல.. நடக்கிற அன்னிக்கு காலையில இருந்தே பார்ட்டி ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிச்சிவோம்.. ஒரு நோட்டு வாங்கி கலக்ஷன் டீடெயில்ஸ், செலவு டீடெயில்ஸ் எழுதி வைப்போம்.. மூணு பேரா பிரிஞ்சி ஆளுக்கு ஒரு வேலை...