செல்பி
திடீரென்று தோன்றி என்ன வரம் வேண்டும் என்ற
கேட்ட கடவுளிடம் டியூட் சொன்னான்: “ப்ரோ, ஒரு செல்பி எடுத்துக்கலாமா? எவனும் நம்ப
மாட்டான்.”
கன்னித்தீவு
வருடம் 2361 / கன்னித்தீவு: பழைய உருவம் பெற்றதும் கத்தியால் ஒரே குத்து குத்தினாள் லைலா சிந்துபாத்தை, "ஏண்டா இதுக்கு 400 வருசமா எடுத்துக்குவ?" என்றபடி.
– முற்றும்
ஓட்டு
டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்தபடி
“முட்டாள் ஜனங்கள்” என்று கத்தினான் வோட்டு போட போகாத சாப்ட்வேர் எஞ்சினியர் குமார்.
Comments