Skip to main content

டீ பார்ட்டி



 1990ஸ் ல ஸ்கூல் படிக்கும் போது, ஒவ்வொரு வருட கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது,  ஒரே ஸ்கூல்ல படிக்கிற நண்பர்கள் பதினைஞ்சு, இருபது பேரு சேர்ந்து காசு கலெக்ட் பண்ணி டீ பார்ட்டி  வைக்கிறது வழக்கம். பொதுவா கடைசி பரிட்சை சமூகவியல் நடக்கிற அன்னிக்கு சாயங்காலம் நடக்கும்.. சில சமயம் அதுக்கு மறுநாள் கூட வைப்போம். 

அதுல மொத முடிவு பண்ற விஷயம்.. யார் வீட்ல வைக்கிறதுன்னு.. எங்க குரூப்ல ரமேஷ் ன்னு ஒருத்தன் வீட்ல நல்ல பெரிய மொட்டை மாடி இருக்கும்.. அவங்க அப்பா அம்மா கொஞ்சம் ஜோவியல் டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாது..  அதனால அவங்க வீட்ல எங்க குரூப் வைக்கும்.. நாங்க எல்லோரும் அதே ஊர்ல இருக்கிற நாடார் ஸ்கூல் ல ஒம்போதாப்பு படிச்சுக்கிட்டு இருந்தோம்.  

அம்பது ல இருந்து நூறு ரூபா வரைக்கும் ஒவ்வொருத்தர்ட்டயும் கலெக்ட் பண்ணுவோம்.   பேரு தான் டீ பார்ட்டி ஆனா வெறும் டீ மட்டும் இல்ல.. நடக்கிற அன்னிக்கு காலையில இருந்தே பார்ட்டி ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிச்சிவோம்.. ஒரு நோட்டு வாங்கி கலக்ஷன் டீடெயில்ஸ், செலவு டீடெயில்ஸ் எழுதி வைப்போம்.. மூணு பேரா பிரிஞ்சி ஆளுக்கு ஒரு வேலை பாரோம்.. 

ஒரு குரூப் உடுப்பி ஹோட்டல் போயி இருபது பரோட்டா பார்ஸல்க்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வரும்.. சைவ பரோட்டா ஒரு செட் தயிர் வெங்காயம் உள்ளேயே வைச்சி கட்டி கொடுப்பாங்க..  குருமா தனியா கட்டி கொடுத்துருவாங்க.. 

ஒரு குரூப் லாலா கடைக்கு போயி.. அஞ்சு ரூபா மதிப்புள்ள ஸ்வீட் காரம் பொட்டலம் வாங்கும்.. பொதுவா மிக்ஸர், அல்வா, உருளை சிப்ஸ் பொட்டலங்கள் வாங்கப்படும்.. தனியா இன்னொரு கடைல பாப் கார்ன் பாக்கெட் கூட வாங்கிப்போம்..  எதனை பேரு பார்ட்டி க்கு சேர்ந்திருக்கங்களோ... அத்தனை பொட்டலம்.. தனித்தனியா கட்டி  வாங்கிக்குவோம். மொத்தமா ஒரு கிலோ வாங்கிட்டு போனா நாம பிரிச்சி கொடுக்கிறது சிரமம்.. அவனவனுக்கு ஒரு பொட்டலம் கொடுத்துட்டா எப்போ வேணும்னாலும் திண்ணுப்பான்ல. 

பால் பாக்கெட் ஒரு ரெண்டு லிட்டர் வாங்குவோம். அதை ரமேஷ் வீட்ல கொடுத்துட்டா அவங்களே டீ போட்டு தருவாங்க.. 

பார்ட்டி யோட முக்கியமான அம்சம் வாடகை வீடியோ டெக் - காஸெட்ட். ஒரு நாள் வாடகை கொடுத்து டெக் வாங்கிட்டு வருவோம்.. இப்போல்லாம் யூடுப், சீடி,  டிவிடி, ஓடிடி ல படம் பாக்கலாம்.. அப்போ வீடியோ காஸெட்ட் இருக்கும் (மேக்னெட்டிக் டேப்).. காஸெட்ட் போட்டு பாக்கணும்.. ஒரு பத்து படம் வாங்கிட்டு வருவோம்.. கண்டிப்பா அதுல ரீசெண்டா வந்த ரஜினி கமல் சரத் விஜயகாந்த் படம் இருக்கும். அப்புறம் இங்கிலீஷ் படம் ஒரு நாலு காஸெட்ட். ஜுராசிக் பார்க், ஜிம்பான்சி, காட் ஜில்லா, இப்படி. 

அப்ப செல் போன் இல்ல. யார் வீட்லயும் கம்ப்யூட்டர் இல்ல.. எங்க வீட்ல பிளாக் அண்ட் வைட் டீவி தான். தூர்தர்சன் மட்டும்தான் வரும். அதனால டெக் போட்டு படம் பாக்கிறது செம்ம ஜாலியான விஷயம் அப்ப.  

பார்ட்டி எவ்ளோ ஜாலியோ அதே ஜாலி அதோட ப்ரெபரேஷன் ல இருக்கும்.. காலையில இருந்தே ஆளுக்கொரு ஒரு வேலையா பிரிச்சிட்டு செய்வோம்.. 

மதியம் ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் ரமேஷ் வீட்டு மொட்டை மாடில டீவி டெக் செட் பண்ண ஆரம்பிச்சிடுவோம்.. டீவி வாடகைக்கு எடுக்காம கீழ இருக்கிற ரமேஷ் வீட்டு கலர் டிவி யை யூஸ் பண்ணிக்கிடுவோம்.. ஒரு பெரிய வைர் எடுத்து கீழ இருந்து கரண்ட் இழுத்து கொண்டு வந்து மேல எஸ்ட்டென்ஷன் பாக்ஸ் ல விடுவோம். அது ல இருந்து டீவி டெக்குக்கு. 

அஞ்சரைக்கெல்லாம் ரமேஷ் வீட்ல இருந்து டீ ரெடியாகி வந்துரும்..நாங்க ஏற்கனவே வாங்கி வைச்சிருக்கிற பேப்பர் கப் ல டீ எடுத்துட்டு வந்து ஆளுக்கொரு கிளாஸ் குடிப்போம்.. சூரியன் இன்னும் மறையாததால படம் கிளாரிட்டி தெரியாது டிவில.. ஆனாலும் எதாவது வீடியோ சாங்ஸ் காஸெட்ட் போட்டு பார்த்து கேட்டுக்கிட்டே டீ குடிப்போம்.... ஒரு ஒழுங்கில்லாம அவனவன் அவன் வாகில் எங்கயாவது உட்க்காந்து டீவி பாப்பான்.. பூரா ஜாலியா அரட்டை அடிச்சிக்கிட்டு இருப்பானுங்க.. அப்ப ஆரம்பிச்சு விடிய விடிய. 

சூரியன் மறைஞ்ச பிறகு, மொத படம் போட ஆரம்பிப்போம்..  மொத படம் தமிழ் லேட்டஸ்ட் படமா இருக்கும் பொதுவா.. படம் போட்டாலும் எல்லோரும் அரட்டை அடிச்சிக்கிட்டே தான் பாப்பாங்க.. பார்ட்டி படம் பாக்கிறதுக்கு மட்டும் இல்ல. இப்படி ஜாலியா பேசிட்டு சாப்பிட்டதே படம் பாக்கத்தான்.. 

சரியா படம் முடியும்போது ஒரு குரூப் போயி உடுப்பி ஹோட்டல்ல சொல்லி வைச்ச பரோட்டா பார்ஸல் வாங்கிட்டு வரும். ரெண்டு மூணு சைக்கிள் ல ஒரு ஆறேழு பேரு போயிதான் வாங்கிட்டு வருவோம். இப்போ மாதிரி ஆட்டோ ல்லாம் நாங்க எடுக்க முடியாது.. இருக்கிற காசு பத்தாது. 

ஏதாவது காமெடி காஸெட்ட் போட்டு விட்டுட்டு எல்லோரும் பரோட்டா சாப்பிட ஆரம்பிப்போம்.. டெக் விடிய விடிய ஓடிக்கிட்டே இருக்கும்.. முழிச்சிக்கிட்டு இருக்கிறவன் பாத்துக்கிட்டே இருப்பானுங்க. 

அடுத்து ஏதாவது இங்கிலீஷ் படம் ஓடும். ஜூமான்ஜி, காட் ஜில்லா இப்படி ஏதாவது. 

படம் ஓடிக்கிட்டு இருக்கும் போதே, ஸ்னாக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் செய்யப்படும். மிக்ஸர் அல்வா பொறி கடலை இப்படி ஏதாவது.. ஒரே நேரத்தில அத்தனையும் கொடுக்கிறது இல்லை.. ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு ஒன்னு. படம் பார்த்துக்கிட்டே சாப்பிட. 

நான் பொதுவா ஒரு மூணு மணிக்கு  தூங்கிடுவேன்.. என்னால தூக்கம் தாக்கு பிடிக்க முடியாது. அப்பவும் படம் ஓடுற சவுண்ட் கேட்டுட்டே இருக்கும்.. தூங்குகிறது அங்கேயே மொட்டை மாடியிலேதான்.. ஒரு நாலைஞ்சு போர்வை விரிச்சிருப்பாங்க.. அப்படியே சாய்ஞ்சிருவோம். நான் வரும்போதே எனக்கு ஒரு போர்வை கொண்டு வந்திருந்தேன் போத்திக்க. 



விடிகாலை ல எந்திரிச்சி பார்த்த அப்பயும் எதாவது ஓடிக்கிட்டு இருக்கும். அவங்கவங்க வீட்டுக்கு ஒவ்வொருத்தனா கிளம்ப ஆரம்பிச்சிடுவாங்க.. பக்கத்திலதான் இருக்கும். என் வீடு பக்கத்துக்கு தெருதான்.. 

அங்க போயி ஒரு ரெண்டு மணி நேரம் குட்டி தூக்கம் போட்டுருவேன். அன்னிக்கு நாள்பூரா  டீ பார்ட்டி நினைவு கிறக்கத்தோட இருப்போம்.. ஏன் இப்போ கூடத்தான். 



Comments

Popular posts from this blog

ஒரு டோக்கன் வேணும்

அவர்  எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது . அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை.    நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘ டீ வேண்டும் ’ என்றோ    அல்லது ‘ பணம் வேண்டும் ’  என்றோ   எப்போதேனும் ஒருவர் கேட்பார் . ஆனால் இவர் கேட்பது   ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். ‘ டீ வேண்டும் ’ என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல  என்று நினைத்திருக்கலாம் . பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் ...

இவான்

  வருடம்  2320 . இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில்  ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான். பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது. உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள் . அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம் பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல் பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமி...