Skip to main content

Posts

Showing posts from February, 2023

நொரநாட்டியம்

பூமியில் கிட்டத்தட்ட எல்லா எல்லா உயிரினங்களும் அழிந்து போய், பூமியை கிட்டத்தட்ட 90% கதிரியக்கம் மூடிய நிலையில், எப்படியோ இருக்கும் அறிவை வைத்து குரோமியம் பூசப்பட்ட பங்கரில் குடும்பத்தை பாதுகாப்பாய் வைத்து விட்டேன். கணினி அறிவும் உண்டென்பதால், நாசாவின் நெட்வொர்க்கில் எப்படியோ நுழைந்து அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்ததால் தப்பித்தாயிற்று. ஆனால் காலையில் நாசா கணினியில் அறிந்த அந்த பேராபத்து செய்தி தூக்கி வாரி போட்டது. இன்னும் இருபது நிமிடங்களில் கதிரியக்கத்தின் அழுத்தம் தாளாமல் பூமி வெடித்து சிதற ஆரம்பிக்க போகிறது. இன்னும் பல மடங்கு வேகமாக நாசா கணினியை நோண்டியதில், அது நூற்றுக்கணக்கான எஸ்கேப் பாட் செய்து  அதில் பல முக்கியமான நபர்கள் பூமியை விட்டு தப்பிய செய்தி கிடைத்தது. அதோடு அதில் சில பாட், கணினி ப்ரோக்ராம் குறைபாட்டால் பழுதடைந்து, இன்னும் இங்கேயே இருக்கிறது என்ற இனிப்பான செய்தியும் கிடைத்தது.  குஷியாக ஒரு காபி அறிந்தியவாறே, அந்த பாட்களின் கணினி பழுதை சில நிமிடங்களில் இங்கிருந்தே சரி செய்தேன். அதன் ஆட்டோமாடிக் சிஸ்டத்தை உயிர்பெற செய்து, இங்கு வரவழைக்க ஆணை ...

10 வினாடி கதைகள்

  செல்பி திடீரென்று தோன்றி என்ன வரம் வேண்டும் என்ற கேட்ட கடவுளிடம் டியூட் சொன்னான்: “ப்ரோ, ஒரு செல்பி எடுத்துக்கலாமா? எவனும் நம்ப மாட்டான்.” கன்னித்தீவு வருடம் 2361 / கன்னித்தீவு : பழைய உருவம் பெற்றதும் கத்தியால் ஒரே குத்து குத்தினாள் லைலா சிந்துபாத்தை , " ஏண்டா இதுக்கு 400 வருசமா எடுத்துக்குவ ?" என்றபடி . – முற்றும் ஓட்டு டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்தபடி “முட்டாள் ஜனங்கள்” என்று கத்தினான் வோட்டு போட போகாத   சாப்ட்வேர் எஞ்சினியர் குமார்.

குப்பை

  நாராயண் அனுப்பிய அவசர குறுஞ்செய்தி பார்த்ததும் மேல் தளத்தில் இருந்த ஆய்வு கூடத்திற்கு விரைந்தார் விண்வெளி மைய இயக்குனர் பாரி ராகவன். உலகம் வாழ முடியாத அளவுக்கு குப்பை மேடாய் போனதால் மாற்று கிரகம் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல வருடங்களாய் நாராயண் ஈடுபட்டுள்ளார். பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் எங்குமே காற்று இல்லாததால் அவை புறக்கணிக்கப்பட்டுவிட்டது. நாராயண் டெலஸ்கோப்பில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். பாரியை பார்த்ததும் “சார்.. ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி..” என்றார். “நல்ல செய்தி முதலில்..” என்ற பாரியை பார்த்து சிரித்தபடி “காற்று இருக்கும் புதிய கிரகம் ஒன்று எனது டெலஸ்கோப்பில் சிக்கி விட்டது”. பாரி முதலில் புன்னகைத்தாலும் கெட்ட செய்தி என்னவாவிருக்கும் என்று யோசிக்கலானார். “சார்.. கெட்ட செய்தி என்னவென்றால் அந்த கிரகம் நம் கிரகத்தைவிட குப்பை மேடாக இருக்கிறது.”. பெருமூச்சு விட்டபடியே “விதி” என்று பொத்தாம் பொதுவாக வானத்தை பார்த்து சொல்லிபடியே “அதற்கு நீங்களே   ஒரு புதிய பெயரும் வைத்து விடுங்கள்” என்றார். “சார் அதற்கு அவசியமில்லை.. அங்கு ஏற்கனவே உள்ளவர்கள் அனுப்பிய ச...

வெறுமை சூழ் உலகு

“முருகேசா... இந்த ஊராவது எனக்கு செட்டாகுமா?” – இருபத்தியேழாவது முறையாக இந்தக் கேள்வியை முருகேசனிடம் கேட்டேன். அவனும் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் பதில் சொன்னான். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு முறையில். “சார்.. இந்த ஊர் எல்லைல ஒரு கம்மா அது பக்கத்துல ஒரு சின்ன சுடல கோவில் இருக்கு.. சாயங்காலம் போயி உட்கார ரம்மியமா இருக்கும். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான். முருகேசன் எனக்கு டிரைவராக வந்து வருடம் பத்து ஆகிறது. அவனுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை. நானும் ஏறக்குறைய அவனை போலத்தான், பல வருடமாய் என் வீட்டில் சமையல், பெருக்குவது, அயன் பண்ணுவது, கடைக்கு போவது, சிறு தோட்ட வேலை சகலமும் அவனே. இதோடு எத்தனை ஊர் மாறியிருப்பேன் என்று கணக்கேயில்லை. ஊர் மாறியபின் சில மாதம் நன்றாய் போகும். பின் எல்லாமே போலியாய் இருப்பதாய் ஒரு தோற்றம். உடன் ஊர் மாற்றும் படலம். ஒரு ஊர் மாறியபின் இந்த முருகேசன் சுடல கோவில் போல சில ரம்மியமான இடங்களை கண்டுபிடித்து வைத்திருப்பான். டீ ப்ளாஸ்க் உடன் போய் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது. போரடித்தால் முருகேசனிடம் எதாவது கேள்வி கேட்டு நேரம் போக்கலாம். சற்று ஊருக்கு ஒது...

சங்கரன் பிள்ளை கதைகள்

சத்குரு நிறைய சங்கரன் பிள்ளை கதைகள் சொல்லுவார். அந்த inspiration-னில் நான் எழுதிய சில சங்கரன் பிள்ளை கதைகள் . ----  சங்கரன் பிள்ளை வெளியே தெரியும் அந்த புதிய கிரகத்தை ஆசையோடு பார்த்தார். விண்கலத்தில் மொறு மொறு வென மிளகாய் பஜ்ஜி போட்டு கொண்டுருந்த சங்கரன் பிள்ளையின் அம்மா, "இந்த கிரகமவாது தேறுமா? " என்று கேட்டார். ஒரு பெருமூச்சுடன் சங்கரன் பிள்ளை, அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த தனது விண்கலத்தில் இருந்து அந்த கிரகத்துக்கு செல்வதற்கான சிறிய டாக்கர் ஷிப்பில் ஏறி அதை கிரகத்தை நோக்கி செலுத்தினார். இன்றோடு இருநூறு வருடம் ஆயிற்று, பூமியை விட்டு வந்து. கொரோனா பூமியை அழித்த பின், எப்படியோ சங்கரன் பிள்ளை தனது அம்மாவுடன் ஒரு விண்கலத்தில் ஏறி தப்பித்து விட்டார். அன்றில் இருந்து வாழ்வதற்கான சூழ்நிலை உள்ள கிரகமாக தேடி கொண்டுருக்கிறார்கள். இது தோராயமாக ஐம்பதாவது கிரகம்.  அம்மா மிளகாய் பஜ்ஜி போட்டு முடிப்பதற்குள், சங்கரன் பிள்ளை சோர்ந்த முகத்துடன் திரும்பி விட்டார். அதிர்ச்சியான அம்மா, "இதுவும் வாழ் சூழ்நிலை இல்லாத கிரகமா?" என்றார். சங்கரன் பிள்ளை வருத்ததுடன், "ஆம் அம்மா.. அமே...