Skip to main content

சங்கரன் பிள்ளை கதைகள்

சத்குரு நிறைய சங்கரன் பிள்ளை கதைகள் சொல்லுவார். அந்த inspiration-னில் நான் எழுதிய சில சங்கரன் பிள்ளை கதைகள் .

----

 சங்கரன் பிள்ளை வெளியே தெரியும் அந்த புதிய கிரகத்தை ஆசையோடு பார்த்தார். விண்கலத்தில் மொறு மொறு வென மிளகாய் பஜ்ஜி போட்டு கொண்டுருந்த சங்கரன் பிள்ளையின் அம்மா, "இந்த கிரகமவாது தேறுமா? " என்று கேட்டார். ஒரு பெருமூச்சுடன் சங்கரன் பிள்ளை, அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த தனது விண்கலத்தில் இருந்து அந்த கிரகத்துக்கு செல்வதற்கான சிறிய டாக்கர் ஷிப்பில் ஏறி அதை கிரகத்தை நோக்கி செலுத்தினார். இன்றோடு இருநூறு வருடம் ஆயிற்று, பூமியை விட்டு வந்து. கொரோனா பூமியை அழித்த பின், எப்படியோ சங்கரன் பிள்ளை தனது அம்மாவுடன் ஒரு விண்கலத்தில் ஏறி தப்பித்து விட்டார். அன்றில் இருந்து வாழ்வதற்கான சூழ்நிலை உள்ள கிரகமாக தேடி கொண்டுருக்கிறார்கள். இது தோராயமாக ஐம்பதாவது கிரகம். 


அம்மா மிளகாய் பஜ்ஜி போட்டு முடிப்பதற்குள், சங்கரன் பிள்ளை சோர்ந்த முகத்துடன் திரும்பி விட்டார். அதிர்ச்சியான அம்மா, "இதுவும் வாழ் சூழ்நிலை இல்லாத கிரகமா?" என்றார். சங்கரன் பிள்ளை வருத்ததுடன், "ஆம் அம்மா.. அமேசான் ஆப், இந்த கிரகத்துக்கு டெலிவரி லொகேசன் இல்லை என்று சொல்லி விட்டது. எப்படி வாழ்வது?" என்றபடி மிளகாய் பஜ்ஜியை ஒரு கடி கடித்தார். 


----


சங்கரன் பிள்ளை மதிய உணவு முடித்து, ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு, பின்பு ஷாம்பவி செய்வதற்காக மாலை ஆறு மணிக்கு மாடிக்கு செல்ல ஆயத்தமாகும்போது, கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தால், மந்தகாச புன்னகையுடன் ஒருவர் நின்று கொண்டுக்கிறார். சங்கரன் பிள்ளை, "நீங்கள் யார்" என்று கேட்ட கேள்விக்கு, "நான் தான் சிவன். ஆதியோகி" என்று பதிலளித்தார். அதற்கு சங்கரன் பிள்ளை, "மிக்க மகிழ்ச்சி.. எதுவாக இருந்தாலும், ஏழு மணிக்கு வாருங்கள். ஷாம்பவி செய்யும் நேரம் இது" என்று சொல்லி விட்டு மாடிக்கு ஏறினார். 


----

சங்கரன் பிள்ளை நேர்முகத்தேர்வுக்கு சென்ற பச்சை கம்பெனி மற்றும் மஞ்சள் கம்பெனி இரண்டிலும் இருந்து வேலை வாய்ப்பு கடிதம் வந்திருந்தது. 


பச்சை கம்பெனியின் ஆஃபர் வருடத்திற்கு ஒரு கோடி. ஆனால் அதில் பத்தாயிரத்துக்கு ஒரு ஹெட் போன் நாமே வாங்கி கொள்ள வேண்டும்  

மஞ்சள் கம்பனின் ஆஃபர் வருடத்திற்கு இருபது லட்சம். ஆனால் அவர்களே ஹெட் போன் கொடுத்து விடுவார்கள். 


எந்த குழப்பமும் இன்றி சங்கரன் பிள்ளை, மஞ்சள் கம்பனியின் ஆஃபரை ஏற்பதாக பதில் கடிதம் எழுதினார். அதிர்ச்சியான புது நண்பர், "ஒரு கோடியில் பத்தாயிரம் போனாலும், மீதம் அதிகம் மஞ்சள் கம்பனியை விட. ஏன் இப்படி மஞ்சளை தேர்வு செய்தீர்" என்று கோபத்தோடு கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை "வாஸ்தவம்தான்.. ஆனால் பத்தாயிரம் செலவு செய்து விட்டால் எனக்கு தூக்கமே வராது" என்றார்.  

----

Comments

Popular posts from this blog

ஒரு டோக்கன் வேணும்

அவர்  எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது . அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை.    நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘ டீ வேண்டும் ’ என்றோ    அல்லது ‘ பணம் வேண்டும் ’  என்றோ   எப்போதேனும் ஒருவர் கேட்பார் . ஆனால் இவர் கேட்பது   ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். ‘ டீ வேண்டும் ’ என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல  என்று நினைத்திருக்கலாம் . பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் ...

டீ பார்ட்டி

 1990ஸ் ல ஸ்கூல் படிக்கும் போது, ஒவ்வொரு வருட கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது,  ஒரே ஸ்கூல்ல படிக்கிற நண்பர்கள் பதினைஞ்சு, இருபது பேரு சேர்ந்து காசு கலெக்ட் பண்ணி டீ பார்ட்டி  வைக்கிறது வழக்கம். பொதுவா கடைசி பரிட்சை சமூகவியல் நடக்கிற அன்னிக்கு சாயங்காலம் நடக்கும்.. சில சமயம் அதுக்கு மறுநாள் கூட வைப்போம்.  அதுல மொத முடிவு பண்ற விஷயம்.. யார் வீட்ல வைக்கிறதுன்னு.. எங்க குரூப்ல ரமேஷ் ன்னு ஒருத்தன் வீட்ல நல்ல பெரிய மொட்டை மாடி இருக்கும்.. அவங்க அப்பா அம்மா கொஞ்சம் ஜோவியல் டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாது..  அதனால அவங்க வீட்ல எங்க குரூப் வைக்கும்.. நாங்க எல்லோரும் அதே ஊர்ல இருக்கிற நாடார் ஸ்கூல் ல ஒம்போதாப்பு படிச்சுக்கிட்டு இருந்தோம்.   அம்பது ல இருந்து நூறு ரூபா வரைக்கும் ஒவ்வொருத்தர்ட்டயும் கலெக்ட் பண்ணுவோம்.   பேரு தான் டீ பார்ட்டி ஆனா வெறும் டீ மட்டும் இல்ல.. நடக்கிற அன்னிக்கு காலையில இருந்தே பார்ட்டி ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிச்சிவோம்.. ஒரு நோட்டு வாங்கி கலக்ஷன் டீடெயில்ஸ், செலவு டீடெயில்ஸ் எழுதி வைப்போம்.. மூணு பேரா பிரிஞ்சி ஆளுக்கு ஒரு வேலை...

இவான்

  வருடம்  2320 . இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில்  ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான். பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது. உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள் . அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம் பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல் பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமி...