வருடம் 2320 . இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில் ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான். பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது. உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள் . அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம் பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல் பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமி...